திருவள்ளுவருக்கு குல்லா கூட போடலாம் ஆனால் காவி உடை கூடாது..! திருமா சொல்லும் பரபர காரணம்!

திருவள்ளுவரை யாரும் நேரில் பார்த்ததில்லை என்பதாலும்அவர் கற்பனை உருவம் என்பதாலும் அவர் தலையில் குல்லா கூட வைக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருமாவளவன் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்குபற்றி பேசிய திருமாவளவன் சிவன் , விஷ்ணுவை யாரும் பார்த்ததில்லை. அதேபோலத்தான் திருவள்ளுவரையும் யாரும் பார்த்ததில்லை அவர் ஒரு கற்பனை உருவமே.

மேலும் திருவள்ளுவர் இருந்த போது இந்து மதம் இல்லை எனவும் ஆகையால் திருவள்ளுவருக்கு சமணர்கள் பௌத்தர்கள் இஸ்லாமியர் கூட உரிமை கோரலாம் என்று திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.

மேலும் திருவள்ளுவர் ஆண்டு அறிவியல் பூர்வமாக இல்லை எனவும் திருவள்ளுவருக்கு எந்த சாயமும் பூச முடியாது எனவும் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.