காலை எழுந்தவுடன் நாம் கட்டாயமாக செய்யக் கூடாதவை என்னென்ன தெரியுமா?

நம் உடல் ஒரு நாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.


இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர் வெந்நீர் அருந்துவார்கள். ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை வெந்நீரைக் காட்டிலும் அதிகம். தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.

சிலர் சர்க்கரை நோய் காரணமாக வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொள்வார்கள். வெந்தயத்தை அப்படியே தண்ணீருடனும் அல்லது மோருடன் சாப்பிடுவது கூடாது. வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

அல்சருக்கு அருமருந்து அருகம்புல் சாறுதான். பைகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணம் கொண்டது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால் வயிற்றுப்போக்கைத் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது இஞ்சித் தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறைப்பதோடு நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். வாய்ப்புண் வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.