பிறந்த நாள் அன்று என்னவெல்லாம் கண்டிப்பாக செய்யக்கூடாது? மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கலாமா?

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும்.


வருடத்தில் சில நாட்கள் இறைவன் நம்முள் நுழைகிறான். பிறந்த நாள், அந்த நாட்களுள் ஒன்றாகும். அன்று நம் ஆன்மா இறைவனை சந்திக்கிறது. நாம் இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம். அப்போது சிறிதளவாவது உணர்வுடன் இருந்தால் நாம், நம்முள் இறைவனின் சாநித்தியத்தை உணரலாம். அந்த நாளில் நாம், சிறிது முயற்சி செய்தாலும் பல பிறவிகளின் பணியை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

பிறந்த நாளில் செய்ய வேண்டியவை என்ன

  1. குலதெய்வ, இஸ்டதெய்வ வழிபாடு
  2. புத்தாடைஅணிதல்
  3. பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறுதல்
  4. வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றலாம்
  5. அன்னதானம், தானதர்மம் செய்தல்
  6. பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
  7. உபநயனம் செய்துகொள்ளலாம்
  8. புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம்
  9. பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல்.

உங்கள் பிறந்த தினத்தன்று 21 கிராமம் தரமான அரிசியை ஒரு மஞ்சள் நிற காகிதத்தில் போட்டு நன்கு மடித்து உங்கள் பணம் வைக்கும் பர்சு மற்றும் சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் அன்றைய தினம் உங்களுக்கு வீண் செலவுகள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதோடு, புதிய பண வரவுகளை ஏற்படுத்தவல்ல ஒரு அற்புதமான பரிகாரமாக இருக்கிறது.

உங்களுக்கே சொந்தமாக தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்கள் ஏதேனும் இருந்தால் உங்கள் பிறந்த நாளன்று அவற்றை அணிந்து கொள்வது மிகவும் நன்மை தரும். ஏனெனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு நேர்மறையான மற்றும் தெய்வீக சக்திகளை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் அதிகமுள்ளது.

பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை:

  1. புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
  2. திருமணம் செய்துகொள்வது கூடாது
  3. சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
  4. சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
  5. அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
  6. கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
  7. வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
  8. முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
  9. தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.

மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.