திருமணமாகி 2 வருடம்..! குழந்தையில்லா மனைவியின் ஏக்கத்தை தீர்க்க முடியவில்லையே? கணவன் எடுத்த விபரீத முடிவு!

திண்டிவனத்தை சேர்ந்த திருமணமான இளைஞர் ஒருவர் நள்ளிரவில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டிவனத்தை சேர்ந்த 27 வயதான சரன் ராஜ் என்பவருக்கும் , 25 வயதான சுபஸ்ரீ என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை. இதனால் இந்த தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்தது.

மேலும் குழந்தையை நினைத்து மனைவி சுபஸ்ரீ அதிக ஏக்கத்தில் இருந்துள்ளார். மேலும் சரன்ராஜ் சிலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரண்ராஜ் உணவு அருந்தி விட்டு மனைவியுடன் தூங்க சென்றிருக்கிறார். நள்ளிரவு 1 மணிக்கு எழுந்த சரன்ராஜ் வேட்டிய மூலம் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கத்திலிருந்து எழுந்த சுபஸ்ரீ தனது கணவர் சரன்ராஜ் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சரன்ராஜ் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.