லலிதா ஜூவல்லரி பாணியில் திண்டுக்கல் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்! எய்ட்ஸ் முருகனை மிஞ்சிய நேர்த்தி! அதிர்ச்சியில் போலீஸ்!

துளைபோட்டு நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் என்ற பகுதி அமைந்துள்ளது. பகுதிக்குட்பட்ட பெட்ரோல் பங்க் அருகே 30 கடைகளை கொண்ட வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ஒரு தளத்தில் ஏடிஎம், இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றுமொரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது.  நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் ஷட்டரை உடைத்து கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் சுவற்றில் துளை இட்டு நகைக் கடைக்குள் சென்றுள்ளனர். சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் லலிதா ஜூவல்லரி நகை கடையில் திருடப்பட்ட டெக்னிக்கை திருடர்கள் இங்கேயும் உபயோகப்படுத்தியுள்ளனர். ஆனால் நகை கடையில் வைக்கப்பட்டிருந்த லாக்கரை கொள்ளையர்களால் திறக்க இயலவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் நகைக்கடை மேஜையிலிருந்த  பொருட்களை அடித்துதைத்து அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

மறுநாள் காலையில் நகை கடை உரிமையாளரிடம் திருட்டு முயற்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நகைக்கடை உரிமையாளர் அய்யலூர் பகுதியில் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அய்யலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று பழனி மாவட்டத்தில் ஏ.கலையம்புத்தூர் என்னும் கிராமத்திலுள்ள அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொண்டு கொள்ளையர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 4 வீடுகளிலும் யாரும் இல்லை. மிக முக்கியமாக பணம் நகை ஆகியவையும் இல்லாததால் திருடர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.