நள்ளிரவு! யாரும் பக்கத்தில் இல்லை! மைக்கை ஆஃப் செய்துவிட்டு கவின் - லாஸ்லியா செய்தது இது தான்..!

இருட்டுப்பகுதியில் கவினும் லாஸ்லியாவும் என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது பற்றி பிரபல தயாரிப்பாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. நாளுக்கு நாள் அதிக திருப்பங்களையும், சுவாரசியங்களையும் கொண்டு நகர்ந்து வருகிறது. சென்ற வாரம் கவினும், லாஸ்லியாவும் வரம்பு மீறி நடந்து கொண்டனர். இருவரும் இருட்டு அறையில் மைக்கின் பேட்டரிகளை கழட்டி வைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

இதனை குறும்படத்தின் மூலம் கமல்ஹாசன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பிக்பாஸ் விதிமுறையை மீறி செயல்பட்டதால் கவின் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்.  இந்நிலையில் கவின் நடித்த, "நட்புனா என்னனு தெரியுமா" படத்தின் தயாரிப்பாளர் இந்த சம்பவத்தை குறித்து தன் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது இருவரும் மைக்கின் பேட்டரிகளை கழுட்டி வைத்து இயக்குநர் சேரனைப்பற்றி பேசி இருக்கலாம். இல்லையேல் பிற போட்டியாளர்களை பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கலாம். அல்லது தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களைப் பற்றியும் பேசி இருக்கலாம்.

இதனால்தான் அவர்கள் மைக்கின் பேட்டரிகளை கழுட்டி வைத்துவிட்டு பேசி இருக்கலாம்" என்று கூறினார். இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.