உள்ளங்கையை சுரண்டினால் படுக்கைக்கு போகனும்..! 2 டைரக்டர்கள் பற்றி நடிகை வெளியிட்ட சீக்ரெட்!

தன்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை குற்றம் சாட்டியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல நடிகைகள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை வைப்பது சகஜமாக உள்ளது. ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ தத்தா ஆகியோர் வெளிப்படையாக சில இயக்குநர்களால் பாலியல் ரீதியில் தங்களுக்கு நேர்ந்த சிரமங்களை கூறியுள்ளனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான எல்லி அவ்ராம் தன்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர். பாலிவுட்டில் "பாலிவுட் போஸ்டர் பாய்ஸ்", நாம் சப்னா", "பஸ்ஸார்" ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்" எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது இவர்,"சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்பு கேட்டு 2 இயக்குநர்களை நான் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் என் கையை குலுக்கி கொண்டு இருந்தார். கைகாகுலுக்கும் போது மற்றொருவர் என் உள்ளங்கையை சுரண்டிக்கொண்டு இருந்தார். எனக்கு அந்த சமயத்தில் ஒன்றும் புரியவில்லை.

இது குறித்து என்னுடைய நண்பர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் அதிர்ந்தனர். மேலும், என்னை அவர்கள் படுக்கைக்கு அழைப்பதற்காக சிக்னல் விடுத்ததாகவும் கூறினர். இதனைக் கேட்டவுடன் நான் பேரதிர்ச்சி அடைந்தேன். மரியாதை கருதி நான் அவர்களுடைய பெயரை வெளியிடாமல் இருக்கேன்" என்று கூறினார்.

இவருடைய பேச்சானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.