பெண் டாக்டர் கொலை வழக்கு! 4 பேரை என்கவுன்டர் செய்த ஐதராபாத் போலீசுக்கு பெரும் ஆபத்து! என்னாச்சு தெரியுமா?

பிரியங்கா ரெட்டி கற்பழிப்பு வழக்கில் நிகழ்ந்த என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்த போவதாக மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நேற்று 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நோக்கி குற்றவாளிகள் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

சிலர் காவல்துறையினர் நாடகமாடி இந்த என்கவுண்டர் சம்பவத்தை அரங்கேற்றியதாக கருத்துக்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போவதாக மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக "ஃபவுண்டேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்" என்ற ஆணையத்தின் தலைவரான ஜெயபிரகாஷ் கூறுகையில், "இந்த செயலானது வருங்காலத்தில் அப்பாவிகளை கொன்று விடும். இது போன்ற கடுமையான குற்றங்களுக்கு சட்டப்படியே தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற என்கவுண்டர்கள் நிச்சயமாக நீண்டகால தீர்வுகளை தராது" என்று கூறினார். 

மனித உரிமைகள் ஆணையம் என்கவுன்டர் செய்த காவல்துறையினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த சம்பவமானது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.