கடைசியாக எப்போது மாதவிலக்கு வந்தது? தமிழ் நடிகையிடம் போலீஸ் கேட்ட பகீர் கேள்வி! பிறகு அரங்கேறிய மர்ம நிகழ்வு!

புதுமுக நடிகையை காவல்துறையினர் சட்டத்துக்கு எதிராக அடைத்து வைத்திருப்பதாக இயக்குனர் கூறியிருப்பது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகம் புதுமுக இயக்குனர்கள் புகழேந்தி என்பவரும் ஒருவர். இவர் "காற்றுக்கு என்ன வேலி", "ரசிகர்மன்றம்" ஆகிய திரைப்படங்களை ஏற்கனவே இயக்கியிருந்தார். தற்போது "கடல்குதிரை" என்ற திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார்.

இதனிடையே காவல்துறையினர் நடிகை பிரசாந்தியை சட்டத்திற்கு எதிராக அடைத்து வைத்திருப்பதாக புகழேந்தி மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "இயக்கிவரும் கடல் குதிரை என்னும் திரைப்படத்தில் ஈழ பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். அதன்படி 1993-ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து இந்திய நாட்டிற்கு வந்த சந்திரன் என்பவரது மகளான பிரசாந்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவெடுத்தேன்.

அவர்கள் முறைப்படி இலங்கை அகதிகள் என்ற சான்றிதழ் பெற்றவர்கள். என்னுடைய படத்திற்கு அவர் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், ஒரு நாள் திடீரென்று அவரும் அவருடைய தாயாரும் எனக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதன்படி நான் அவர்களே மெரினா கடற்கரையில் சந்தித்தேன். அப்போது பிரசாந்தி என்னிடம், "க்யூ பிரிவு காவல்துறை தனக்கு செல்போனில் அழைப்பு விடுத்ததாகவும், சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்ட பின்னர் மாதவிலக்கு நிற்கும் கேள்வி எழுப்பியதாகவும்" கூறினார். பாலகணேசன் என்பவருக்கு எதிராக புகழேந்தி நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

வடபழனி காவல்துறையினர் பிரசாந்தி நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் பிரசாந்தியின் வீட்டிற்கு சென்று சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு ஆகஸ்ட் மாதத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் இருவரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவு காவல்துறையினர் இருவரையும் பல மாதங்களாக மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை எப்படியாவது மீட்டு வெளியே கொண்டு வர உத்தர விடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.