நக்மா - ஜோதிகா இடையே உண்மையில் என்ன உறவு? முதல் முறையாக வெளியான சூர்யா குடும்ப ரகசியம்!

முன்னாள் முன்னணி கதாநாயகிகள் இருவரும் உண்மையான சகோதரிகளல்ல என்ற செய்தியானது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


90-களில் கோலிவுட் திரையுலகை கலக்கி வந்த கதாநாயகிகளில் நக்மா, ஜோதிகா ஆகியோர் முக்கிய இடங்களை வகிப்பர். இதனிடையே இருவரும் அக்கா தங்கைகள் உண்டு சில ஆண்டுகள் கழித்து கூறப்பட்டு வந்தது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். நடிகை நக்மா சினிமா துறையில் இருந்து வெளியேறி தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இருவரும் கூடப்பிறந்த சகோதரிகளல்ல என்ற செய்தியானது தற்போது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் சந்தர் சாதனா. இவருக்கு 2 மனைவிகளுள்ளனர்.

மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை நக்மா. இளைய மனைவிக்கு ஜோதிகாவும் ரோஷினி என்ற மற்றொரு பெண்ணும் உள்ளனர். ஆகையால் உறவு முறையின் வகையிலே சகோதரிகளாக இருப்பினும் இருவரும் கூடப்பிறந்த சகோதரிகளல்ல என்ற உண்மை தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.