சனி பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் இந்த மூன்று ராசியினருக்குத்தான்? மற்றவர்களுக்கு எப்படி என்று படித்துப் பாருங்கள்!

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.


கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதிமுக்கியமான பதவியை வகிக்கின்றார். இவர் சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார். ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றது.

நவக்கிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளார்.

சனிதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக அசுப செயல்களை செய்யக்கூடியவர் ஆவார். சனிதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து 3, 7 மற்றும் 10 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார். சனிதேவர் ராசிக்கு 3, 6, 11ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடியவர் என்று பழைய மூலநூல்களில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்திலும், சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்திலும், மீன ராசிக்கு பதினொன்றாம் இடத்திலும் இருந்து நன்மை செய்யவுள்ளார்.