எந்த ராசி பெண்களை காதலித்தால் வாழ்க்கை இனிக்கும் தெரியுமா? சகல ராசிக்கும் பலன்கள்!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில், லக்னத்தில் பிறந்திருப்பார்கள்.


அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொரு விதமான பழக்கம், யோகம் என்பன அவரவர் இராசியைப் பொறுத்து அமையும். அதன்படி இந்த ராசி, லக்னக்காரர்கள் மட்டும் எப்படி என்றுப் பார்ப்போம்.....! 

மேஷ ராசிக்காரர்கள் எதிலும் முந்திக் கொண்டு செல்லும் அவசரகாரர்கள். 

ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னக்காரர்கள் சுவையான இனிப்பு உணவு உண்பதில் ஆசை கொண்டவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே சங்கீத ஞானம் பெற்றவர்களாக இருப்பர். 

கடக லக்னகாரர்களுக்கு இயற்கையாகவே பலரை வைத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் இருக்கும். 

சிம்ம லக்னகாரர்களுக்கு 5-க்குடையவன் 9-க்குடையவன் இணைந்து நின்றால் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தைரியம் அதிகமாக இருக்கும். 

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ஈடுபட்ட தொழிலில் திறமையுடன் செய்து முடித்து நல்ல லாபம் அடைவார்கள். 

மேஷ ராசி பெண்களை சிம்மம் விருச்சிக ராசி ஆண்கள் காதலித்தால் வெற்றி கிடைக்கும். இவர்களின் வாழ்க்கையும் விருப்பப்படி அமையும். 

ரிஷபம், கடகம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் எளிதில் காதலில் சபலப்படுவர். 

கன்னி லக்னம் அல்லது ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஓவியர்களாக இருப்பார்கள். 

ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசியாகவும், லக்னமாக கொண்டவர்களுக்கும் சுக்ரன் கெட்டு இருந்தாலும் நன்மையே செய்வார். 

கும்ப லக்னகாரர்களுக்கு சனி, சு+ரியன் இணைந்து மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் நின்று இருந்தால் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் நிலை உண்டாகும். 

ரிஷப ராசி பெண்களை கடகம் துலாம் ராசி ஆண்கள் காதலித்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். 

மேஷம், கடகம், விருச்சிகம் ராசிக்காரர்கள் எப்போதும் துருதுருவென சுறுசுறுப்புடன் இருப்பார்கள். 

சஷ்டி திதியில் பிறந்தவர் முருகனை வழிபட்டு கந்த சஷ்டி பாராயணம் செய்தால் முருகன் அருளால் துன்பங்களில் இருந்து காப்பார். 

அமாவாசையில் பிறந்தவருக்கு மன தைரியம் அதிகம் இருக்கும். சந்திரன், சூரியனோடு சேர்க்கை பெறுவதால் சந்திர பலனை சூரியன் கொடுக்கும்போது தைரியத்தோடு காரியத்தை துணிந்து செய்வார்கள். 

பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் பாசத்திற்கும், நேசத்திற்கும் ஆளாக இருப்பார்கள். 

திரியோதசியில் வரும் பிரதோஷ காலத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் சிவன், பார்வதி தேவியின் அருள் பெற்றவர்கள்.