இந்த வருடத்தின் அடுத்த 7 மாதங்கள்..! டிசம்பர் வரை மனிதர்கள் எதிர்கொள்ளப்போகும் பேராபத்துகள்! அதிசய ஜோதிட சிறுவன் திக் திக் கணிப்பு!

கொரோனாவுக்கு பிறகு மீண்டும் ஒரு பேரழிவு நிச்சயமாக காத்திருக்கிறது என்று பிரபல ஜோதிட சிறுவன் கூறியிருக்கும் வீடியோவானது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 3,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 59,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும் என்று 8 மாதங்களுக்கு முன்னதாகவே பிரபல இந்திய வம்சாவளி ஜோதிடரான அபின்ஞா ஆனந்த் கூறியிருந்தார். 

இவருடைய வயது 14. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே கிரகநிலை ஆராய்ச்சிகளின் மூலம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அழிவு தொடங்கப்போகிறது என்று கணித்திருந்தார். அதாவது ஜோதிடத்தின் படி ஒரு ராசியில் அதிக கிரகங்கள் சேருகின்ற போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் இந்த வைரஸ் தாக்குதல் முற்றிலும் ஒழிந்தாலும், உலக மக்கள் இன்னும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். கிரக கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதாலேயே இதுபோன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் இவற்றுக்கு எதிராக உலக மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் தாக்குதலானது ஜூன் மாத இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜூலை மாதத்தில் அதன் வீரியம் அதிகரித்து பின்னர் மீண்டும் குறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் தாக்குதல் ஒழிந்த பிறகும் உலக மக்கள் பல்வேறு விதமான பேராபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் புதிய வீடியோவில் கூறியுள்ளார். உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அதாவது ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து வெட்டுக்கிளிகள் ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வழியாக இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளைநிலங்களை பிற நாடுகளிலிருந்து வரும் வெட்டுக்கிளிகள் அழித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏற்படும் காலத்தில் இந்தியாவில் வேளாண் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் அதிகமாகவுள்ளது என்றும் கூறியுள்ளார். 

மேலும் ஒரு ஸ்கொயர் கிலோமீட்டர் பரப்பளவில் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்றும், அவை தினமும் 35 ஆயிரம் பேருடைய உணவை சாப்பிட்டு விடும் என்றும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மத்திய அரசாங்கத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அவ்வாறு ஏற்படுவதற்கு முன்னரே அரசாங்கமானது விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.