திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுக்கு இந்தோனேசியா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு உல்லாசத்துக்கு தடை! கிளர்ந்து எழுந்த இளம்பெண்கள்! போர்க்களம் ஆன நகரம்!
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. நேற்று அங்கு நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அப்போது சட்ட மசோதாவின் முன்வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த சட்ட வரைவில், இந்தோனேஷியா குடிமக்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு செய்தால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்னர் ஒருவர் வேறு ஒரு நபருடன் வாழ்ந்தால் 6 மாத காலம் சிறை தண்டனை அளிக்கப்படும்.
நாட்டின்பிரதமர், மதம், அரசு அலுவலகங்கள், தேசியக் கொடி ஆகியவற்றை அவமதிப்பு அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். உடல்நலக் கோளாறு அல்லது பாலியல் பலாத்காரத்தால் ஏற்பட்ட கருவை தவிர கருக்கலைப்பு செய்தால் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் போன்ற புதிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இதனால் இந்தோனேஷிய மக்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். அதிருப்தியின் வெளிப்பாடாக ஜகார்தாவில் உள்ள நாடாளுமன்றத்தின் வாயிலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1998 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியாவில் நடக்கும் மாபெரும் போராட்டத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த போராட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மசோதாவின் மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
இந்த சம்பவமானது இந்தோனேஷியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.