கல்யாண ஆசை வந்திருச்சா? இந்த மந்திரத்தை 108 தடவை சொல்லுங்க!

வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமைதோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.

ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோவ சங்கரீ ஸகல ஸ்தவர ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம் சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம. இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெறவேண்டும்.

திருமணம் விரைவில் நடைபெற இன்னொரு வித வழிபாட்டுமுறை உள்ளது. கன்னிப்பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்து கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

துர்க்கைக்கு சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு பால்பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் முதலில் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும்.