ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை! மத்திய அரசு அறிவிப்பு!

ஊரடங்கு திட்டத்தை மேலும் நீடிப்பதற்கான திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது.


உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸின் பிடியில் இந்தியாவும் சிக்கி தவித்து வருகிறது.

இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு போதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத தால் கொத்துக் கொத்தாக உலகெங்கிலும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இன்னிலையில் சமூக விலகல் ஒன்றே இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வழி என்று நம்முடைய மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் தினம்தோறும் கூலி வேலைக்கு சென்று தங்களது உணவு உட்கொள்ளும் ஏழை எளிய மக்கள் தங்களுடைய அன்றாட உணவுக்காக போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அதற்காக தன்னை மன்னித்து விடும்படி நாட்டு மக்களிடம் கூறியிருக்கிறார்.

ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த ஒரு வழியும் தெரியவில்லை . ஆகையால் தான் இதனை நான் கையிலெடுத்து உள்ளேன் என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார். இதனையடுத்து மேலும் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதற்கான எந்த ஒரு திட்டமும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

தற்போது நடைமுறையில் இருந்து வரும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு இயல்பு வாழ்க்கை திரும்ப வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.