புளிய மரத்தில் பேய் இருக்கிறதா? புளியமரத்தடியில் ஏன் தூங்கக்கூடாது?

நம் கலாச்சாரத்தில் கோயில்களில் ஸ்தல மரங்கள் என்று வைத்திருப்பார்கள். பெரும்பான்மையாக ஆலமரமும் அரசமரமும் அதிக அளவில் அமைத்திருப்பார்கள்.


நம் எல்லோருக்கும் தெரியும், மரமானது பகலில் பிராணவாயுவையும் இரவில் கரியமில வாயுவையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது என்று. நாம் நன்றாக கவனித்துப் பார்த்தால் இரவில் பறவைகள் அதிக அளவில் ஆலமரமும் அரசமரமும் தேர்ந்தெடுத்து தங்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாகத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் கோவில்களில் இவ்வகை மரங்களை நடுவதற்கு அதிகளவில் ஊக்கப்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் நாட்டில் பெரும்பான்மையாக குளத்தருகில் அல்லது முக்கிய இடங்களில் அரசமரத்தடிப் பிள்ளையார் காண்கிறோம். இரவில் புளியமரத்தில் அதிக அளவு கரியமில வாயு வெளிப்படுவதன் காரணமாக பறவைகள் அதை உணர்ந்து இரவில் தங்குவதில்லை. அது போல புங்கை மரமும், புளிய மரத்தைப் போல அதிகளவு கரியமில வாயுவை வெளிப்படுத்துவதன் காரணமாக பறவைகள் இந்த மரத்திலும் இரவில் தங்குவதில்லை.

பிராரப்த கர்மம் என்றால் இந்த பிறப்பின் கால அளவு. சஞ்சித கர்மம் என்றால் வரவிருக்கும் அனைத்து பிறவிகளின் மொத்த கர்மவினையின் குவியல். நம் பேச்சு வழக்கில் ஏதோ ஒன்று ஒருவருக்கு நிகழ வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டால் அவருக்கு பிராரப்தம் இல்லை என்னும் சொல்வழக்கு உண்டு. இதில் நாம் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் பிராரப்த்த கர்மா என்பது இப்பிறவிக்கான கால அளவு ஆனால் தலைவிதி அல்ல.

ஒருவருக்கு மரணம் என்பது முறையே

1 பிராரப்த்த கருமம் முடிவுக்கு முன் உயிர் பிராணசக்தியை அதன் உச்சத்திற்கு எடுத்துச் சென்று உடலை உதரினால், பிறப்பற்ற முக்தி நிலை, சமாதி.

2 யோகா, தியானம் மூலமாக நம் உயிர் சக்தியின் கட்டுப்பாட்டை நம் கையில் எடுக்காத பொழுது, பிராரப்த்த கருமம் முடியும்போது ஒருவருக்கு இயல்பாக மரணம் ஏற்படும். அது ஒரு இயற்கையான மரணம். உதாரணம் வயோதிகத்தால் ஏற்படும் மரணம்.

3 பிராரப்த கர்மம் முடிவதற்கு முன்னால் தற்கொலை, கொலை, விபத்து, துர்மரணம், போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்பட்டால் பிராரப்த்த கர்மம் முடிவுறாமல் கொஞ்சம் எஞ்சி இருக்கும்.

பிராரப்த்தம் கர்மா முடியாமல் இறந்தவர்கள் அந்த கர்மவினை கால அளவு முடியும் வரை அடுத்த உடல் மூலம் பிறப்பு கிடைக்கும் வரை உலகத்தில் அவர்கள் பேயாக அலைவார்கள். இறந்தவர்களின் வயதினை பொருட்டு அவர்களில் அதிர்வுகளில் வித்தியாசப்படும். இளம் வயதில் இறப்பவர்கள் அவர்களின் பிராப்த கர்மம் அதிக அளவில் இருப்பின் அவர்களின் அதிர்வு அதிகப்படியாக உணரும்படி இருக்கும்.

இவர்கள் பெரும்பாலும் “வாசனை” என்ற வகையில் செயல்படுவார்கள் அதனால்தான் குறைந்த வயதுடைய ஒருவர் இறந்து விட்டால் அவரது உடமைகள் முக்கியமாக துணி வகைகளை எரித்து விடுவது அல்லது வைத்துக் கொள்ளாமல் இருப்பது நம் கலாச்சாரத்தில் பெரியவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இப்படியாக அலைபவர்கள் பொதுவாக மனித நடமாட்டமில்லாத அல்லது முக்கியமாக எந்த ஒரு தொந்தரவும் இல்லாத இடத்தை தேர்ந்தெடுப்பர். உதாரணம் சுடுகாடு, புளியமரம். எல்லா புளியமரத்தில் பேய் இருக்குமா என்றால் அப்படி இல்லை அங்கு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

இதன் காரணமாக பொதுவாக புளியமரத்தடியில் தூங்க கூடாது, அல்லது தங்கக் கூடாது என்பது மக்கள் மத்தியில் பரவலாக வழக்கத்தில் உள்ள ஒரு கூற்று.