இந்துக் கோயிலில் அசிங்கமான பொம்மைகள்தான் இருக்குமா? திருமா பேச்சால் திணறும் விடுதலை சிறுத்தைகள்!

தேர்தல் நேரங்களில் மட்டும் இந்துக் கோயில்களுக்கு ஏறி இறங்குவதும், திருநீறு பூசிக்கொள்வதும் திருமாவளவனின் வழக்கம். மற்ற நேரங்களில் குல்லா வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களுடன் உறவாடுவதும், கிறிஸ்தவர்களுடன் இணைந்து போராடிக்கொண்டும் இருப்பார்.


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கம்பன் கழக விழாவில் பேசிய திருமாவளவன், ‘‘கூம்பாக இருந்தால் அது மசூதி. உயரமாக இருந்தால் அது தேவாலயம். அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோயில்’’ என்று பேசிய வீடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டபோது, எத்தனை பக்தியுடன் தில்லை நடராஜர் கோயிலுக்குச் சென்று தீட்சதர்களிடம் ஓட்டு கேட்டார். தேர்தல் இல்லாத நேரம் என்பதால் வாய்க் கொழுப்பை காட்டியிருக்கிறார் என்று இந்துக்கள் கொந்தளிக்கின்றனர்.

திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஓட்டு வாங்க வேண்டும் என்றால் அசிங்கமான பொம்மைகள் இருக்கும் இடத்துக்கு வந்து சேரும் திருமாவளவனுக்கு, அது இப்போதுதான் ஞாபகம் வந்ததா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த விவகாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பெரும் தர்மசங்கடத்தைக் கொடுத்துள்ளதாம். என்னத்துக்கு இப்படி பேசினார் என்று புரியாமல் தவிக்கிறார்கள்.