தேர்தல் வரும் நேரத்தில்தான் சின்னக் கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு கிடைக்கும். ஏனென்றால், அவர்களிடம் இருக்கும் ஒருசில சதவிகித வாக்குகளும் வெற்றிக்கு உதவக்கூடும்.
டாக்டர் ராமதாஸின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகுதே !எல்லாம் தேர்தல் வரப்போகும் அறிகுறிதான்.

அந்தவகையில் டாக்டர் ராமதாஸின் 82-ஆவது பிறந்த நாள் நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது என்பதை அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் பட்டியலில் இருந்தே அறிந்துகொள்ளலாம்.
தொலைபேசி மூலம் வாழ்த்தியவர்கள்: நரேந்திர மோடி, எடப்பாடி கே. பழனிச்சாமி, . ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், மு.க.ஸ்டாலின், ஆனைமுத்து, தலைவர், மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.
மேலும் எல். முருகன் அவர்கள், தலைவர், பாரதிய ஜனதாக் கட்சி, சரத்குமார், சு. திருநாவுக்கரசர், ஜெகத்ரட்சகன், பொன். இராதாகிருஷ்ணன், சி.பி. இராதாகிருஷ்ணன், டி.எம். செல்வகணபதி, கருணாஸ், எஸ்.பி. வேலுமணி, எச்.இராஜா, உதயநிதி ஸ்டாலின், .எஸ்.ஆர். சேகர் என்று பட்டியல் நீள்கிறது.