தீபாவளி அன்று இதை பார்த்தால் அமோக வாழ்வு கிடைக்குமாம்! உங்க வீட்டில் இருப்பதை பார்க்க மறந்துடாதீங்க.

பல்லி என்பது ஒரு ஊர்வன வகை விலங்காகும். பல்லிகள் பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் காணப்படுகின்ற ஒரு உயிரினமாகும்.


நமது வீட்டிற்குள்ளாக வரும் கொசு, நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும். நமது புராணங்களிலும் பல்லி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்பது அனுபவ வாக்கு. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். 

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாவார். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வட இந்தியாவில் தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. வீட்டில் தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் அதிகம். 

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்  

தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்  

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி  

நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்  

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி  

வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்    

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை  

முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்  

கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்  

கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்  

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி 

தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி  

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்  

பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்  

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு  

கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு 

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்  

கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு  

மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை  

மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி  

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி 

மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை  

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்  

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்  

நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு  

காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் 

காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்  

மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்  

மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்  

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி  

கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை  

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. 

பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே. அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. 

பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது. 

சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது. 

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லியை தரிசித்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் விலகும். அதேபோல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும் இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் என்பது ஐதீகம்