இந்தியாவில் பரவுவது ஒன்றல்ல..! ரெண்டல்ல..! 3 கொரோனா வைரஸ்..! சற்று முன் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் 3 மாதிரிகளாக பரவி வருவதாக இந்தியன் சென்டர் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் கூறியிருப்பது நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,54,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 22,48,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 14,378 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 1,990 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 480 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று "ஐ.சி.எம்.ஆர்"  என்று அழைக்கப்படும் இந்தியன் சென்டர் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது, "மனிதர்களை தாக்கும் வைரஸ்கள் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ என இருவகைப்படும். ஒரு உடம்பிலிருந்து மற்றொரு உடம்பிற்கு செல்லும்போது இந்த டிஎன்ஏ வைரஸ்கள் தன்னை அப்டேட் செய்து கொள்ளாது.

அறிவியல் ரீதியில் கூற வேண்டுமென்றால் ம்யூடேட் (mutate) செய்துகொள்ளாது. ஆதலால் இவற்றை எளிதில் கண்டுபிடித்து விடலாம். மருந்தையும் மிகவிரைவாக கண்டுபிடிப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் மற்றொரு வகையான வைரஸ் போர் உடலிலிருந்து மற்றொன்றுக்கு செல்கின்ற போது, "ம்யூடேட்" செய்துகொள்ளும். இதன் மூலம் எங்க வைரஸ் தன்னுடைய தன்மையை மாற்றிக்கொள்ளும். ஆகையால் இந்த வைரஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். மேலும், மருந்து கண்டுபிடிக்க மிகப்பெரிய சவாலாக அமையும்.

தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இதுபோன்ற வைரஸ் ரகத்தை சார்ந்தது. அதாவது முதன் முதலில் சீனாவில் தோன்றிய வைரஸ், அமெரிக்கா நாட்டிற்கு சென்ற பின்னர் தன்னுடைய தன்மையை சிறிதளவும் மாற்றிக்கொண்டது. அதேபோன்று வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்படும் ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சென்றபோது வேறு ஒரு வகையில் தன்னை மாற்றிக்கொண்டது.

இறுதியாக ஐரோப்பா கண்டத்திற்கு சென்றபோதும் தன்னை மாற்றிக்கொண்டது. இதுபோன்று இந்தியாவில் இந்த வைரஸ் பரிமாற்றம் இன்னும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

மிகவும் கவனமாக இருக்க வேண்டியது எதிலென்றால், எந்த வகையை சேர்ந்த வைரஸ் நம் நாட்டில் பரவி இருக்கிறது என்பதை நாம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கேற்றவாறு சிகிச்சைகளை அளிக்க இயலும். வடமாநிலங்களில் பெரும்பாலாக அமெரிக்காவிலிருந்து வந்த வைரஸ்களும், தென்மாநிலங்களில் வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வைரஸ் மாதிரிகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு விரைவில் இதனை கண்டுபிடிக்க முடிகிறதோ, அவ்வளவு விரைவாக நோய் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும்"என்று கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.