போத்தீஸ் ஜவுளிக்கடை அதிபர் மகள் படுக்கை அறையில் ரகசிய கேமரா..! போலீஸ் விசாரணையில் அம்பலமான திடுக் உண்மை!

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மகளின் வீட்டில் 6 சவரன் தாலி சங்கிலி திருடப்பட்டுள்ள சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை அபிராமபுரத்தில் பிரபல ஜவுளிக்கடையான போத்தீஸின் உரிமையாளரின் மகள் தர்ஷினி கணவருடன் வசித்து வருகிறார். ஆகஸ்ட் மாதத்தில் தர்ஷினியின் தாலி சங்கிலி திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. ஆடி 18 சமயத்தில் தாலியை பிரித்து புது தாலி போடுவதற்காக பழைய தாலியை தர்ஷினி கழட்டி வீட்டின் அலமாரியில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த தாலி தேவைப்பட அதனை தேடிய போது காணவில்லை, இதே போல் அலமாரியில் இருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் சிறிது ரொக்கமும் காணாமல் போயிருந்தது. இதனை அடுத்து 6 சவரன் தாலி சங்கிலி திருடப்பட்ட தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென தனது வீட்டின் படுக்கை அறையில் சிசிடிவி கேமரா வைத்திருப்பதாக கூறி ஒரு பதிவை போலீசிடம் தர்ஷினி தரப்பு கொடுத்துள்ளது. என்னது? படுக்கை அறையில் சிசிடிவியா? என போலீசார் கேட்ட போது, அதிகம் திருட்டு போனதால் யார் என்று கண்டுபிடிக்க கேமரா வைத்ததாக தர்ஷினி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த காவல்துறையினர், அந்த வீட்டின் காவலாளியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் லிங்கா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் ராஜீவ் மீண்டும் சென்னை திரும்பிய போது காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

அவருடன் மேலும் ஒரு பணிப்பெண்ணிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.