பாத்திரக்கடைக்குள் புகுந்து அந்த பொருளை பாவாடைக்குள் பதுக்கிய ஜகஜால பெண்! வைரல் வீடியோ!

சேலம் அருகே பாத்திரக்கடையில் கோவில் மணியை பெண் ஒருவர் திருடியது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.


சேலம் பள்ளம் பட்டியில் இயங்கி வரும் செல்வம் பாத்திரக்கடையில் வழக்கம்போல வியாபாரத்தை முடித்து விட்டு எதேச்சையாக  கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துப்கொண்டிருந்தார் உரிமையாளர்.

அப்போது  ரூ 5000 வரை மதிக்கத்கக்க பித்தளையினால் ஆன  கோயில்  மணியை, பெண் ஒருவர் தனது ஆடைக்குள் மறைத்து திருடி செல்லும் காட்சிகளை கண்டு அதிர்ந்துபோனார். பொருட்கள் வாங்குவது போல் வந்த அந்த பெண்மணி திடீரென கோவில் மணியை தூக்கி தனது பாவாடைக்குள் பதுக்கியுள்ளார்.

இதனை அடுத்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சேலம் அருகே உள்ள பெரமனூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

மேலும் திருடப்பட்ட கோயில் மணி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் சம்மந்தபட்ட  பெண்ணுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.