பாஜக காட்டிய வழி..! திருமாவளவனை கழட்டிவிட ஸ்டாலின் முடிவு..! கொரோனா பரபரப்பிலும் திமுகவின் அரசியல் கணக்கு!

சென்னை: பாஜகவை நம்பி திருமாவளவனை கழற்றி விட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


பாஜக போல, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திமுக பொருளாளராக நியமிக்க, மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடைபெற்றிருந்தால் திருமாவளவனை கூட்டணியில் இருந்தே திமுக கழற்றி விட்டிருக்குமாம். எனினும், கடைசி கட்டத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.  

சமீபத்தில் பாஜகவின் தமிழக தலைவராக, தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டார். இது தமிழக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அவரது பதவிக்கு துரைமுருகனை நியமிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இதற்கேற்ப, கட்சியின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொருளாளர் பதவிக்கு யாரை நியமிக்க, என்ற தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளாராம்.பாஜகவைப் போல தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை பொருளாளராக நியமித்தால், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு கிடைக்கும் என்று

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நினைக்கின்றனராம். இதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக உள்ள ஆ.ராசாவின் பெயரை மு.க.ஸ்டாலின் பரிசீலனையில் வைத்துள்ளாராம்.எனினும், இதற்கு டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, மு.க.ஸ்டாலின் கடைசி நேரத்தில் ஆ.ராசாவை நியமிக்கும் முடிவை கைவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், கொரோனா வைரஸ் வந்துவிட்டதால்,

திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பிரச்னை முடிந்த பிறகு, திமுக பொதுக்குழு கூடி இதுதொடர்பாக, இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளில் தலித் சமூக பிரதிநிதி யாரும் முக்கிய பதவியில் கிடையாது. ஆனால், அதனை பாஜக மாற்றி காட்டியுள்ளது. இதனால், திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தலித் சமூகத்தினருக்கு முக்கிய பதவி தந்து, அவர்களின் ஆதரவை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.