ஹீரோயின்..! குணச்சித்திர நடிகை! அள்ளிக்குவித்த விருதுகள்! ஆனால் மரணத்தின் போது சுஜதாவிற்கு நேர்ந்த பரிதாபம்!

மிகவும் பிரபலமான முன்னாள் கதாநாயகியின் மரணம் அழியாத கதையாகவே இருந்ததைப்பற்றி இந்த செய்தியில் காண்போம்.


1970-களில் தென்னிந்திய சினிமாக்களில் வழங்கும் அந்த முன்னணி கதாநாயகிகளில் நடிகை சுஜாதாவும் ஒருவர். இவர் இலங்கை நாட்டிலுள்ள கலே நகரத்தில் 1952-ஆம் ஆண்டில் பிறந்தவர். இளம்வயதிலேயே இந்திய நாட்டின் கேரள மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார்.

இவருக்கு சினிமாவின் மீது பெரிய மோகமெல்லாம் இருந்ததில்லை. ஆனால் இவரை தேடி படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. மலையாள மொழியில் "தபஷ்வினி" என்ற படமே அவருடைய முதல் படமாக அமைந்தது. மேலும் எர்ணாகுளம் ஜங்ஷன் வேணும் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, சுஜாதாவின் நடிப்பு இயக்குநர்.கே.பாலச்சந்தரை வெகுவாக கவர்ந்தது.

உடனடியாக தமிழ் மொழியில் பாலச்சந்தரின் இயக்கத்திலேயே "அவள் ஒரு தொடர்கதை" என்னும் திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். தென்னிந்திய சினிமா உலகின் பிரம்மாண்ட நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், எஸ்.பி.முத்துராமன், மோகன் பாபு, சோபன் பாபு, ரஜினிகாந்த், கமலஹாசன், நாகேஸ்வரராவ் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தின்போது திருமணம் நடைபெற்றது. திருமணமான பிறகு இவர் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். அவரை பார்ப்பதற்கும், கால்ஷீட் வாங்குவதற்கும் இயக்குநர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது. இவருடைய கணவரின் பெயர் ஜெயகர்.

1990-களுக்கு பிறகு பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி திரைப்படம் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த "வரலாறு" ஆகும். 

2011-ஆம் ஆண்டில் வயது மூப்பின் காரணமாக சுஜாதா இறந்து போனார். அப்போது தமிழகத்தில் தேர்தல் சமயம் என்பதால் சுஜாதாவின் இறப்பு ஒரு அறியப்படாத கதையாகவே முடிந்துவிட்டது.