பாற்கடலை கடைந்தால் உண்மையில் அமிர்தம் வருமா? வராதா?

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்-


இதைவிட ஒரு காமெடி என்னன்னா, அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்ணுவோட அவதாரமாம். தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல.அப்படி செத்தா அதுசாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம். அதை குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம். இந்த கதையையெல்லாம் உண்மையா? நம்பலாமா? என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுவதுண்டு.

இனி, விசயத்திற்கு வருவோம்.

இந்து கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள். மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட *உருவகக்கதைகள்.*

இந்த கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது. அதனால் என்கோடிங் (encoding) செய்யப்பட்ட உருவகங்களை டிகோடிங் (decoding) செய்தால் போதும். அதன் பொருள் அதுவாகவே விளங்கும். இப்போது இந்த பாற்கடல் கதையை டிகோடிங் (decoding) செய்வோம்.

பாற்கடல் - *குண்டலினி சக்தி*

மேருமலை - *முதுகுத்தண்டு*

வாசுகி பாம்பு - *மூச்சுக்காற்று*

தேவ, அசுரர் - *இடகலை, பிங்கலை* (நாடி)

ஆமை - *ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை.*

தொண்டைக்குழி - *விசுக்தி*

விஷ்னு - *வாழ்வு*

ஆலகாலவிஷம் - *கபம்*

அமுதம் - *நித்ய வாழ்வு* (மரணமில்லா பெருவாழ்வு),

அதாவது முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை, பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது. (இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்). ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை, பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும். அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர். இந்தப்பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும். அப்போது, பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபம் கலைத்துவிடும்.

இந்து தர்மத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு கதைக்கும் அர்த்தம் இருக்கிறது. பக்தியோடும், ஞானத்தோடும் படிக்கும் போது அதன் பொருள் விளங்கும்.