மனோகர் பாரிக்கர் மகனை கழட்டிவிட்ட பாஜக! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

கோவா மாநிலம் பா.ஜ.க. இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பனாஜி தொகுதியில் இருந்து மனோகர் பாரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்த் காலத்தில் அவரது ஆதரவோடு சித்தார்த் குங்கலியெங்கர் என்பவர் 2 முறை பனாஜி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் பனாஜி தொகுதிக்கு அடுத்த மாதம் 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பனாஜி தொகுதியில் போட்டியிட பாரிக்கரின் மகன் உத்பலைய்யும் குங்கலியெங்கரையும் மாநில பா.ஜ.க. தலைவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து இருவருமே ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் பனாஜி மாநகராட்சி பா.ஜ.க. கவுன்சிலர்கள், கட்சியினர், ஆதரவாளர்கள் உள்ளிட்டோருடன் பா.ஜ.க. மாநிலம் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது குங்கலியெங்கருக்கு ஆதரவு அதிகமாக இருந்ததையடுத்து அவரே வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.