90ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச நாயகன் தி ராக் எடுத்த முடிவு! கண்ணீரில் கலங்கும் ரசிகர்கள்!

WWE என்று அழைக்கப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல ஹாலிவுட் நடிகரும் மற்றும் முன்னணி ரெஸ்ட்லிங் வீரரான தீ ராக் அறிவித்துள்ளார்.


சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவராலும் பேசப்படும் ஒரே WWE வீரர் தி ராக். ஹாலிவுட் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும்  ராக் எனப்படும் டிவைன் ஜான்சன் திரைப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் ,  கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக  குறைவான WWE போட்டிகளிலேயே பங்கேற்று வருகிறார் . 

இந்நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் : ஹாப்ஸ் அண்ட் ஷா திரைப்படத்தில்  படத்தில் நடித்த ராக் அந்தப் படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது , அவரின் ரெஸ்லிங் வாழ்க்கையை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது . அப்போது பேசும் போது ரெஸ்லிங் எனக்கு மிகவும் பிடிக்கும் . மக்கள் மற்றும் ரசிகர்களின்  முன்னே ரெஸ்லிங் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடுவதற்கு சமம் வேறு எதுவுமே கிடையாது . ஆனால் நான் ரெஸ்லிங் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் .

ஏனென்றால் WWE போட்டிகளில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதை எல்லாம் சாதித்து விட்டேன் . ஆகையால் நான் ரெஸ்லிங்  போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார் .இவரின் இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .

இவர் சக போட்டியாளர்களான அண்டர்டேக்கர் ,ட்ரிபிள் எச் , ப்ராக் லெஸ்னர் , ஜான் சீனா போன்ற முன்னணி வீரர்களுக்கு முக்கிய  போட்டியாளராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

ராக்  தனது கடைசி போட்டியில் wrestlemania 32 ல் , வியாட்  பிரதர்ஸ் உடன் மோதினார் .இந்த போட்டியில் ராக் 6  நொடியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .