திருவிளக்கில் ஐந்து முகம் இருப்பதன் காரணம் தெரியுமா?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் ஐந்து.


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை கடவுள் செய்கிறார். பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என சக்திகளை ஐந்தாகப் பிரிப்பர். சிவ மந்திரங்களில் சிறந்தது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம். சங்கு, சக்கரம், கதாயுதம், கத்தி, வில் என மகாவிஷ்ணுவின் ஆயுதங்களை ஐந்து. விநாயகர், சூரியன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களை வழிபடுவதை பஞ்சாயதன பூஜை எனச் சொல்வர்.

ரத்தினசபை, பொற்சபை, ரஜத சபை, தாமிரசபை, சித்திரசபை என நடராஜருக்குறிய சபைகள் ஐந்து. சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என லிங்கத்தின் வகைகள் ஐந்தாகும். இப்படி கடவுளுக்கும் ஐந்துக்கும் உள்ள தொடர்பை காட்டும் விதத்தில் வழிபாட்டுக்குரிய திருவிளக்கில் ஐந்து முகங்கள் உள்ளன.

இவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாக கருதப்பட்டு வருவதால் ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றுவது நல்லது.  பஞ்ச முக விளக்குகள் வைத்தால் இரண்டு ஜோடியாக வைக்க வேண்டும். பஞ்ச முக விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றுகிறோம் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

பஞ்சமுக விளக்கு ஏற்றுவதால் எல்லா நன்மைகளும் கிட்டும். அஷ்ட ஐஸ்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடை நீங்கும். புண்ணியம் பெருகும்.