ஜயப்பனுக்கு இருமுடியில் நெய்த் தேங்காய் எடுத்துச் செல்வது ஏன் தெரியுமா?

ஐயப்பனுக்கு பிரதான வழிபாடு நெய் அபிஷேகம்.


முற்றிய தேங்காயை எடுத்து அதில் ஒரு கண்ணை குடைந்து உள்ளிருக்கும் நீரை எடுத்து விட்டு பின்னர் சரணம் சொல்லிக் கொண்டே தேங்காய்க்குள் பசு நெய்யை நிரப்பிவிடுவார்கள்.  பின் தேங்காய்க்குப் பொட்டிட்டுப் பூமாலை போட்டு தூப தீப நைவேத்தியங்கள் காட்டி இருமுடிப்பையில் பக்தி சிரத்தையோடு வைப்பார்கள்.

பசு நெய் மகாலட்சுமியின் அம்சம்.  மகாலட்சுமியோ எப்பொழுதும் மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள். நெய்யானது விஷ்ணு ஸ்வரூபம். முக்கண் உள்ள தேங்காய் சிவ அம்சம். அதனால்தான் சபரிமலை தரிசனத்திற்குச் செல்பவர் ஹரிஹர சம்பந்தமுள்ள நெய்த் தேங்காயை எடுத்துச் செல்கின்றனர். சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிள்ளையாக அவதரித்தவர் ஹரிஹர சுதனான ஐயப்பன்.

மனிதனிடம் ஆணவம், வன்மம், மாயை போன்ற மும்மலங்கள் உண்டு. இவை நீங்கினால் ஆன்மாவுக்கு ஆனந்தம் உண்டு .அதனால் தேங்காய்களை எடுத்துச் சென்று மும்மலங்களை நீக்கி உள்ளிருக்கும் நெய்யை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அர்ப்பணிக்கிறார்கள்.