தி.மு.க.வின் அராஜகமும் ஆசையும் தாங்க முடியலையே… டென்ஷனாகும் பொதுமக்கள்

ஆட்சியில் இல்லை என்றாலும் அராஜகம் செய்வது தி.மு.க.வினருக்கு கைவந்த கலை. அப்படியொரு நிகழ்ச்சி தென்காசியில் நடந்து கடும் அதிர்வலைகளை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சமீபத்தில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 11ஆம் தேதிதான் நடைபெற்றது. மூன்று நாட்கள் கூட முடியவில்லை. அதற்குள் ஆட்சியர் அலுவல திறப்புவிழா நோட்டீஸ் அடித்து ஊர் முழுக்க ஒட்டிவிட்டனர் திமுகவினர். இதில் பெரிய காமெடி என்னவென்றால் இந்த கட்டடத்தை நாளைய தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க இருப்பதாக அச்சிடப்பட்டிருப்பது தான்.

இதுகுறித்து பேசும் பொதுமக்கள், ‘பொதுவாக ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க.வினர் அடக்கியே வாசிப்பார்கள். ஒரு சின்ன காரியமென்றாலும் அதிகாரிகளிடம் தயங்கியபடிதான் கூறுவார்கள். ஆனால் திமுகவினர் இதற்கு நேரெதிரானவர்கள். அதிகாரம் இருந்தால் அவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இருக்காது. உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் முதல் கோட்டை வரை இவர்களின் அதிகாரம் தூள் பறக்கும்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் லோக்கல் நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை செய்த நில ஆக்கிரமிப்பு மக்கள் மனங்களில் இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. அதுபோலவே பணி நியமனங்கள், இட மாறுதல்கள், காண்டிராக்ட் வேலைகளில் திமுகவினரின் கைவரிசையையும் மறக்க முடியாது.

இவற்றையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. மொத்தத்தில் திமுகவினர் என்றாலே அதிகார போதையில் மிதப்பவர்கள் என்றுதான் மக்கள் எண்ணுகிறார்கள்.

இப்படி போதையில் மிதப்பதால்தான் இப்போதே முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைப்பதாக போஸ்டர் அடித்து ஊரை உஷ்ணப்படுத்துகிறார்கள். அப்படியொரு நிலைமை வந்துவிடக்கூடாது’ என்று தெரிவித்தனர். 

மக்களின் ஆசை நிறைவேறட்டும்.