சவூதி எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீ! இந்தியாவில் உயரப்போகுது பெட்ரோல் விலை! வண்டியை ஓரம் கட்டுங்கோ!

சௌதி அரம்கோ நிறுவனத்தின், கிழக்கு சவுதி அரேபியாவில் அமைந்துள்ள இரண்டு எண்ணெய் கிடங்குகள் மீதான ட்ரோன் தாக்குதல்களால், செப்டம்பர் 16 ம் தேதி உலக எண்ணெய் சந்தை வர்த்தகத்தின் போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5-7 டாலர் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐஓசி, ஹெச்பிசிஎல், பிபிசிஎல், கெயில் போன்ற இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப விலை உயர்வு அறிக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ஏற்கனவே தினம் ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வினை ஈடுகட்ட மீண்டும் சில்லறை வணிகத்தில் பெட்ரோல் விலை உயர்த்த வாய்ப்புள்ளது.

ட்ரோன் தாக்குதலுக்கு உட்பட்ட அந்த இரு பிரிவுகளிலும் நாளொன்றுக்கு. 70 லட்சம் பேரல்கள் சேமிக்கும் திறனுள்ளவை என்று கூறப்படுகிறது. இது சௌதி அரேபியா மற்றும் உலக நாடுகளுக்கான வர்த்தகத்தில் சுமார் 5 சதவிகித உற்பத்தி என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சௌதி ஆரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 72 சதவிகித பங்குகளை. அதாவது 5.35 லட்சம் கோடி அளவிற்கு வாங்கி. அதன்மூலம் இந்திய பெட்ரோலிய சந்தையில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்காக கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு நிறுவனங்களுக்கும் ஏற்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அந்நிய நேரடி முதலீட்டில். 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் போடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த தாக்குதலால். இந்திய வணிக உறவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருக்கிறது சௌதி ஆரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். இந்த தாக்குதல் சம்பவத்தால். திங்கட்கிழமை தொடங்கவுள்ள உலக எண்ணெய் வர்த்தகத்தில், சுமார் 5 சதவிகித உயர்வினை ஏற்படுத்துக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணியன் கலியமூர்த்தி