ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது! இனியாவது வீட்டுக்கு ஐயாயிரம் கொடுப்பாரா மோடி? ராகுல் சுளீர்.!

கொரோனா தொற்று குறித்து ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே எச்சரித்துக் கொண்டே இருந்தார். ஆனால் இதனை மத்திய அரசு ஒருபோதும் கண்டுகொள்ளவே இல்லை.


அதேபோன்று கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நேரத்தில் ஏழைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேணடும் என்பது காங்கிரஸ் கட்சியின் முதன்மை கோரிக்கையாக இருந்தது. அதையும் மத்திய அரசு ஏற்கவில்லை..

இந்த நிலையில், பொருளாதாரத்தை மீடடெடுக்க நீண்ட காலம் ஆகும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மோடிக்கு சுளீர் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 ‘‘பல மாதங்களுக்கு முன் நான் எச்சரித்தது என்னவோ? அதை இன்று ஆர்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அதிகமாக செலவு செய்யுங்கள், கடன் கொடுக்காதீர்கள். ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். தொழிலதிபர்களுக்கு வரி குறைப்பு செய்யாதீர்கள். நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள்.

மீடியா மூலம் திசைதிருப்புவதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியாது அல்லது பொருளாதார சீரழிவை மறைத்துவிட முடியாது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இனியாவது வீட்டுக்கு ஐயாயிரம் கொடுப்பாரா மோடி…?