அவனுக்கு கொரோனா..! வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரப்பிய ஊர்காரர்கள்..! தற்கொலை செய்து கொண்ட முஸ்லீம் இளைஞன்! மதுரை அதிர்ச்சி!

மதுரை அருகே ஒரு நபர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரப்பிய வதந்தியால் மனம் விருத்தி அடைந்து சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.


கொடூர கொரோனாவின் வைரஸ் தொற்று உலகளவில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருகின்றது. இந்நிலையில் நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸை விட அதைப் பற்றிய வதந்திகள் மிகவும் அதிகமாக பரவி வருகின்றது. அதுமட்டுமின்றி, சாதரணமான இருமல், சளி வந்தால் கூட அது கொரோனா தொற்று தான் என்று அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்தியுள்ளார்கள். மேலும், சமூக வளைதளங்களில் இது குறித்து அதிக அளவில் தகவல் உலா வந்து கொண்டு இருகின்றது.

இந்நிலையில், மதுரை அருகே கிராமத்தில் வசிக்கும் வரும் முஸ்தபா என்ற நபர் கேரளாவில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தொற்று கேரளாவில் அதிக அளவில் உள்ளதால் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு முஸ்தபா அவர்களுக்கு சளி இருமல், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் முஸ்தபா அவரது தாயையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை சோதனை செய்த மருத்துவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி படுத்தினர்.

ஆனால் முஸ்தபா அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக கூறி அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வீடியோ  வாட்ஸ்ஆப்பில் பரப்பப்பட்டதால் மனமுடைந்த அவர் கப்பலூர் டோல்கேட்டில் சென்னையிலிருந்து வந்த சரக்கு ரயிலில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது