விதவை பெண்ணுக்கு மோக வலை! சிக்கியவரிடம் கட்டு கட்டாக பணம் பறித்த இளைஞன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


மும்பையின் முலுந்த் பகுதியில் வசிப்பவர் நிதின் ஷாம்ராவ் ஸிண்டே. 38 வயதாகும் இவர் தனியார் அலுவலகத்தில் உயர் பதவியில் உள்ளார். இவருடன் பணிபுரியும் பெண் ஒருவர், விவகாரத்து ஆனவர் என கூறப்படுகிறது. அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணின் தனிமையை பயன்படுத்தி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நிதின் நெருங்கிப் பழகியுள்ளார்.

ஒருகட்டத்தில், திருமணம் செய்யும் முயற்சியை கைவிட்ட நிதின், அந்த பெண்கூட பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனில், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான், அது நடக்கும் என, நிதின் மிரட்டியுள்ளார். வேறு வழியின்றி அந்த பெண் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். எனினும், நிதின் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தரவே, அவர்கள் நிதினை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.