கொரோனா தொற்று காலத்தில் தமிழக மக்களுக்கு ரேஷனில் இலவச பொருட்கள் கொடுத்தது மட்டுமின்றி ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு தவணைகளில் கொடுத்து வாழவைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தீபாவளிக்கு எவ்வளவு பணம் தருவார் எடப்பாடி பழனிசாமி..? தமிழக மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு.
இந்த தீபாவளிக்கும் தமிழக அரசின் பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் ஒரு நிவாரணத் தொகையை வழங்கலாம் என்றும், அது அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக அமையும் என்றும் ரங்கராஜன் கமிட்டி அறிவிப்பு செய்திருக்கிறது.
இதற்கான நிதிஆதாரம் பற்றியும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஒரு ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் என்று வழங்கமுடியுமா என்றும் அதற்கான வழிமுறைகளையும் பார்க்குமாறு எடப்பாடி கூறியிருப்பதாக செய்திகள் கசிகின்றன.
ஆகவே, தீபாவளிக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் இரண்டாயிரம் லட்சியம் என்று எடப்பாடி பழனிசாமி செயலாற்றிவருகிறார். அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகி தமிழக மக்களுக்கு ஆனந்தம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.