சவீதா ஹாஸ்பிடலில் கிட்னி ஆப்பரேஷன் செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்! கதறும் மனைவி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் (சவீதா)மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நோயாளி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சுங்குவாசத்திரத்தை அடுத்த குண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிவர், கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் கஷ்டபட்டுவந்தார்,  ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரகுபதிக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இதனை அடுத்து மருத்துவமனையில் தங்கி அவர் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் நேற்றிரவு திடீரென ரகுபதிக்கு உடல்நலம் பாதிப்பால் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மனைவி சுகுணா,  செவிலியரிடம் கூறி, மருத்துவரை அவசரமாக  அழைக்க கூறியுள்ளார், ஆனால் அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது.நீண்ட நேரம் காத்திருந்தும் ரகுபதிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் வரவில்லை .

இந்த நிலையில் ரகுபதி பரிதாபமாக  உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரகுபதியின் உறவினர்கள், சவீதா மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே அவர் உயிரிழந்ததார் என  மருத்துவமனை நுழைவாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.