தாலி கட்டிய அடுத்த நிமிடம்..! மணக் கோலத்தில் ஊர் மக்களுக்கு வாரி வழங்கிய மாப்பிள்ளை - பெண்..! எங்கு தெரியுமா?

காஞ்சிபுரத்தில் எளியமுறையில் நடைபெற்ற திருமணம் திருமணமான தம்பதியினர் மணகோலத்தில் ஊர்மக்களுக்கு கொரோனா நலதிட்டம் வழங்கினார்கள்


காஞ்சிபுரம் மாவட்டம் மேல்ஒட்டிவாக்கம் பகுதியில் மறைந்த திமுக எம்.எல்.ஏ. பொன்.முருகேசனார் இல்ல திருமண விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய. செயலாளர் பி.எம்.குமார் தலைமையில் நடைபெற்றது மேல்ஒட்டிவாக்கம் கிளை கழக செயலாளர் மூர்த்தி - விஜயா தம்பதியினரின் மகனான மேல்ஒட்டிவாக்கம் இளைஞரணி அமைப்பாளர் மூ. சுரேஷ் மற்றும் பத்மாவதி திருமண விழா கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை மற்றும் ஊரடக்ககு உத்தரவு அமுலில் உள்ள சூழ்நிலை மிக எளிய முறையில் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்துக்கொண்டு திருமணம் செய்துக்கொண்டனர் 

இந்த திருமண விழாவில் காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்.ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் . பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

இதனை தொடர்ந்து திருமண மண்டபத்திற்க்கு ஏற்படுத்திய தொகையை மேல்ஒட்டிவாக்கம் கிராம மக்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி,காய்கறி மளிகை பொருட்களை 300-குடும்பக்ககளுக்கு வழங்கினார்