தி.மு.க. கூட்டணியில் அடுத்த கட்சி அவுட்!அதிர்ச்சியில் ஸ்டாலின், வெளியேற்றினாரா திருமாவளவன்?

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சிவகாமி ஐ.ஏ.எஸ். நடத்திவந்த சமூக சமத்துவப் படை இடம்பெற்றிருந்தது. அந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் சிவகாமி ஐ.ஏ.எஸ். உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்செல்வனிடம் சுமார் 7,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


அதேபோன்று இந்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று சிவகாமி ஆசைப்பட்டார். ஆனால், மீண்டும் மீண்டும் தூது அனுப்பியும் தி.மு.க.விடம் இருந்து எந்த அழைப்பும் இல்லையாம்.

‘கடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட வாக்குவங்கி வாங்குவதற்காக உங்களை சேர்த்தோம், இப்போது உங்களைவிட வலிமையான திருமாவளவன் இருக்கிறார், அதுபோதும், நீங்கள் வேண்டாம்’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றி விட்டார்களாம்.

இந்தத் தேர்தலில் சீட் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போதும் ஆதரவு தருகிறோம் என்று சிவகாமி சொன்னாராம். 

அதற்கும் தி.மு.க. சார்பில், ‘உங்களைக் கூப்பிட்டுப் பேசினால் திருமாவளவன் மனம் வருத்தப்படும். அதனால் வேற இடம் பாருங்க’ என்று விரட்டி விட்டார்களாம். கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டதால், அ.தி.மு.க.வுக்கு வலியச் சென்று ஆதரவு கொடுக்கவும் முடியாமல் கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம் சிவகாமி. 

இவர் தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரத்தில் இறங்க வாய்ப்பு உண்டு என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். கூப்பிட்டு வைத்து சமாதானப்படுத்துவாரா அல்லது அதிர்ச்சி கொடுத்த காரணத்தால் அவமானம் செய்வாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.