என்னது இறந்துட்டாரா? கணவன் உயிரிழந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் குழந்தையை பிரசவித்த இளம் மனைவி..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் உயிரிழந்த அடுத்த நாளில் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. தனது கணவர் மரணம் குறித்து யாரும் இன்னும் மனைவிக்கு கூறவில்லை என்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.


கேரளாவை சேர்ந்த நிதின் சந்திரன் மற்றும் அதிரா என்ற தம்பதினர் இருவரும் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இதற்கிடையில், மனைவி அதிரா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, அதிரா இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுவது என்னவென்றால், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பிரசவத்துக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், கடந்த மே மாதம் 7ஆம் தேதி அன்று தனது சொந்த ஊரான கேரளாவின் கோழிகோடுக்கு விமானத்தின் மூலம் வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அவர் கணவர் நிதின் துபாயிலேயே இருந்து பணியை தொடர்ந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், துபாயில் வேலை பார்த்து கொண்டு இருந்த நிதின் சந்திரன் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் நேற்று தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில், இந்த தகவல் மருத்துவர்களின் அறிவுரைப்படி மனைவி அதிராவிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சற்று முன்னர் அதிராவுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ள்து. ஆனாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு கணவர் மரணம் குறித்து யாரும் இன்னும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நிதினுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவருடைய உடல் சொந்த ஊருக்கு புதன்கிழமை கொண்டு வரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.