போட்ரா வெடிய..! தீபாவளிக்கு மறு நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறையாக இருந்தாலும் யாருக்கும் பலன் இல்லை. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை.

அதே சமயம் தீபாவளிக்கு மறு நாள் திங்கட்கிழமை. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை கட்டாயம் அனைவரும் பணிக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் தான் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட திங்கட்கிழமையை அரசு விடுமுறையாக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை அரசு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளியை கொண்டாடிவிட்டு மறுநாளே யாரும் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.