வயது வெறும் 23 தான்..! இதுவரை 8 பெண்களுடன் திருமணம்..! தஞ்சை இளைஞனிடம் 9வதாக சிக்கிய இளம் பெண்!

8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞர் தஞ்சை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ஒக்கநாடு என்னும் பகுதிக்கருகே கிழையூர் வடக்கு தெருவில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 23. இவர் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 

கருவிழிக்காடு என்னும் பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை காதலித்த இவர், 5 மாதங்களுக்கு முன்னால் சத்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் திருப்பூரில் இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர். இதனிடையே திடீரென்று 1.5 மாதங்களுக்கு முன்னால் சந்தோஷ் மாயமாகியுள்ளார்.

தன்னுடைய கணவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த சத்யா, அவரை கண்டுபிடிக்க இயலாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தோஷ், சசிகலா என்ற பெண்ணுடன் ஒக்கநாடு கீழையூரில் குடும்பம் நடத்தி வருகின்றனர் வந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் கீழையூருக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது சந்தோஷ் பல இளம் பெண்களுடன் ஒட்டி உறவாடி விட்டு அவர்களை திருமணம் செய்து கொண்ட பின்னர் காணாமல் போவதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.