நீங்கள் ரகசியம் காப்பவரா? இதோ உங்கள் ராசி சொல்லும் ரகசியம்!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெவ்வேறு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் ராசி அதிபதியைப் பொறுத்து குணாசதியங்கள் மாறுபடுகின்றன.


அதில் சில ராசிக்காரர்கள் கோபம் கொண்டவர்களாகவும், பொய் பேசுபவர்களாகவும், நம்பிக்கை உரியவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் சில ராசிக்காரர்கள் மற்றவர்களைப் பற்றி புறணி பேசும் பழக்கமும், ஏமாற்றமும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அந்த வகையில் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் அதிக கோபத்தில் இருந்தாலும், ரகசியத்தை வெளியே ஒரு போதும் சொல்ல மாட்டார்கள். 

விருச்சிகம் :  நீங்கள் உங்கள் ரகசியத்தை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் விருச்சக ராசிக்காரர்களிடம் தைரியமாக சொல்லலாம். இந்த ராசிக்காரர்களை நம்பி யார் எதை சொன்னாலும் அவற்றை ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். இயற்கையாகவே இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள். 

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் சத்தியத்தையும், ரகசியத்தையும் மதித்து நடப்பதால், உங்கள் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால் இவர்களிடம் சொல்லலாம். இயற்கையாகவே இவர்களிடம் பொறுமை மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகமாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாயில் இருந்து ஏதேனும் தகவலைப் பெற நினைத்தால் கண்டிப்பாக பெற முடியாது. இவர்கள் ரகசியத்தை பாதுகாத்து வைப்பார்கள். 

கன்னி :  கன்னி ராசிக்காரர்கள் ரகசியத்தைப் பாதுகாத்து வைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் நம்பிக்கையுள்ளவர்களாகவும், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

மகரம் : மகர ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியத்தை கூறினால் மற்றவர்களிடம் சொல்லமாட்டார்கள். மேலும் அந்த ரகசியத்தை எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்தமாட்டார்கள். அதுபோல அந்த ரகசியத்தை வெளியே கூறுவதால் எந்தவித பலனும் கிடைக்காது என்பதை நன்கு அறிந்தவர்கள். இவர்களுக்கு பொய் சொல்பவர்களைப் பிடிக்காது. ஆனால் இவர்கள் எதிரியாக இருந்தாலும் உண்மையாக இருப்பார்கள். 

மீனம் : மீன ராசிக்காரர்களிடம் ரகசியத்தை கொன்னால், அந்த ரகசியத்தை பாதுகாப்பதை பெருமையாக நினைத்துக் கொள்ளும் குணம் கொண்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் ரகசியத்தை வெளியே கூறி நம்பிக்கையை உடைக்க விரும்பமாட்டார்கள். இவர்கள் மிகவும் உள்ளுணர்வுடன் இருப்பார்கள். 

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களின் ரகசியத்தை ஒருபோதும் வெளியே சொல்லமாட்டார்கள், மிகவும் பத்திரமாக மனதிலே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் அன்பானவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர்கள் ரகசியத்தை வெளியே கூறி தனது பெயரை கெடுத்து கொள்ள மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் அதிக கோபம் கொள்பவர்களாக இருந்தாலும், தங்களுக்கு பிடித்தவர்கள் என்னதான் தவறு செய்தாலும், அதை மன்னிக்கும் கருணை குணம் கொண்டவர்கள்.