அ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அதிர்ச்சியில் தி.மு.க.க்

தேர்தல் என்று சொன்னாலே எல்லாவற்றிலும் முதலாக நிற்பதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம். அந்த வகையில் ஒரு பக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கும் நிலையிலும், அ.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.


இந்த முதல் பட்டியலில் 6 பேர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, முதல்வர் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகிறார்கள்.

இதையடுத்து முக்கிய அமைச்சர் பெருமக்களான அமைச்சர் ஜெயக்குமாருக்கு ராயபுரம் தொகுதியும் சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 7வது முறையாக ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பது முக்கியமான தகவல்.

அடுத்து, நிலக்கோட்டை தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.ஏ. தேன்மொழியும், ஸ்ரீஇவைகுண்டம் தொகுதிக்கு எச்.பி.சன்முகநாதனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேருமே, அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்கள்.

இன்றைய தினம் நல்ல நேரத்தில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும் என்பதால் 6 பேர் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி திடீரென அ.தி.மு.க.வில் பட்டியல் வெளியிடப்பட்டதைக் கண்டு தி.மு.க. கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது..