நில அபகரிப்பு வேலையை கொரோனா காலத்திலும் தி.மு.க.வினர் விடவே இல்லை..! உதாரணம் திருப்பூர் கோ.ராமதாஸ் லீலைகள்!

நில அபகரிப்பு, பியூட்டி பார்லர், பிரியாணி கடை என்று தி.மு.க.வின் அட்டகாசங்கள் ஆட்சியில் இல்லாத நிலையிலும் தொடரவே செய்கிறது.


பிறர் நிலத்தை அபகரிக்கும் வேலையை இந்த கொரோனா காலத்திலும் தி.மு.க.வினர் விடவே இல்லை என்பதற்கு உதாரணம் தான் திருப்பூர் தி.மு.க. பகுதி செயலாளர் கோ.ராமதாஸ் லீலைகள் என்று குற்றம் சாட்டுகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், காந்திநகரைச் சேர்ந்த பழனிச்சாமி பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பழனிசாமி. திருப்பூர் பெரியார் காலனியில் மூன்று வருடங்களுக்கு முன்பு இவர் வாங்கிய இடத்தைத்தான் ராமதாஸ் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆக்கிரமிப்பு குறித்து ராமதாஸிடம் பழனிச்சாமி கேட்டதும், ரவுடிகளை வைத்து மிரட்டியது மட்டுமின்றி அவதூறு வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். அதனால், இப்போது தனக்கு நியாயம் கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மேலும், இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசி நியாயம் கேட்டிருக்கிறார். அங்கே எதுவும் நடக்கவில்லை என்றதும் ஸ்டாலினுக்கு நியாயம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அங்கேயும் எதுவும் நடக்கவில்லை என்றுதான் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார் பழனிச்சாமி.

இனியாவது, தி.மு.க.வினரின் அராஜகத்துக்கு ஒரு முடிவு வரவேண்டும் என்று எண்ணுகிறார் பழனிச்சாமி.