கறுப்பர்கூட்டத்துக்கும் திமுகக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! போலீஸ் விசாரணையில் அம்பலமாகிறது கறுப்பர் கூட்டத்தின் பின்னணி..!

கறுப்பர் கூட்டத்தின் நிர்வாகி செந்தில்வாசனுக்கு இரண்டாவது நாளாக போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவர் பல்வேறு விஷயங்களை கக்கியிருப்பதாக கூறப்படுகிறது.


குறிப்பாக, கறுப்பர்கூட்டத்துக்கும் திமுகக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்று என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தி.மு.க.வின் ஐ.டி. விங்க் தலைவர் பழனிவேல் தியாகராஜனுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் உறுதியாகத் தெரிந்துள்ளது.

இதுதவிர, அவர்களுடைய சேனலுக்கு பணம் வரும் வழிகளும் ஆராயப்பட்டுள்ளன. அவை எல்லாமே தி.மு.க. தலைவர்களின் வங்கிக் கணக்கில் இருந்தே வந்துள்ளது. இதுதவிர, அவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரும் தி.மு.க.வை சேர்ந்தவர். ஆம், இந்த வழக்கில் ஆஜராகியிருப்பவர் ராஜ் திலக். இவர் தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவில் ஜூனியர். 

அதனால் பணம் கொடுத்தது, ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி, இப்போது காப்பாற்ற முயல்வதும் தி.மு.க. என்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறது.

ஆம், கறுப்பர் கூட்டத்துக்கு முழு ஆதரவாக இருந்துவரும் தி.மு.க.வைச் சேர்ந்த மதுரை ஐ.டி. புள்ளியிடம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கந்த சஷ்டி விவகாரம் இப்படி தி.மு.க.வை கதறகதற விரட்டுவதுதான் பரிதாபம்.

இந்து கடவுள்களை பகைச்சுக்கிட்டா அப்படித்தான் என்று இந்துக்கள் டென்ஷன் ஆகிறார்கள்.