1977 முதல் 1987 வரை புரட்சித்தலைவரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் மூன்று முறை வெற்றி அடைந்தார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்காத புரட்சித்தலைவரின் நேர்மையான ஆட்சி
கடைசியாக 1984ம் ஆண்டு தேர்தலில் பிரசாரம் செய்யாமல் அமெரிக்காவில் படுத்துக்கொண்டே ஜெயித்தார். அவரது வெற்றிகளுக்குக் காரணம் இதுதான்.
சினிமாவில் போலவே அறம் சார்ந்த அரசியல் அரங்கேறியது. நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை நடத்தினார். குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கவே இல்லை. கட்சிக்காரர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். எந்த நேரமும் பதவி பறிக்கப்படலாம் என்பதால் தவறு செய்வதற்குப் பயந்தனர்.
புரட்சித்தலைவர் காலத்தில் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் இருந்தது. கட்சிக்காரர்கள் எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம் – என்று மிரட்டும் அளவுக்கு அதிகாரிகளுக்கு சுதந்திரம்கொடுத்திருந்தார்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறு செய்த கட்சி நிர்வாகிகளை, அமைச்சர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பது போன்ற முறைகேடுகள் நிகழவில்லை.
புரட்சித்தலைவர் முறைகேடாக சொத்து சேர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டுகூட எழுந்ததில்லை. தமிழகத்துக்கே முதல்வராக இருந்தாலும் சிம்பிளான வாழ்க்கையை நடத்தினார். ஊழலற்றஆட்சிநடத்தியதால்தான், மருத்துவமனையில்படுத்துக்கொண்டேஜெயித்தார். திரைத்துறையில் கதாநாயகனாக கடைசிவரை ஜொலித்ததுபோலவே, அரசியலில் முதல்வராக ஆட்சியேற்று, முதல்வராகவே மறைந்தார். மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் என்பதால்தான் அவர் மக்கள்திலகமாக, வள்ளலாக, ஏழைப்பங்காளனாக, இதயக்கனியாக போற்றப்படுகிறார். இந்த உலகில் கடைசி மனிதன் வாழும்வரையிலும், புரட்சித்தலைவர் புகழ் நிலைத்துநிற்கும் என்பது உறுதி.