முதல் நாளில் எடப்பாடி அடித்த சூப்பர் சிக்ஸர்… வீட்டுக்கு வீடு 2,500 ரூபாய். எடப்பாடியாரின் சரித்திர சாதனை

விவசாயி ஒருவரின் ஆட்சிதான் இப்போது நடந்துவருகிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல் நாள் பிரசாரத்தில் அவர் அடித்த சிக்ஸர், தமிழக மக்கள் அத்தனை பேரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆம், தமிழர்களின் பண்டிகையாக கொண்டாடப்படுவதுதான் பொங்கல். இது விவசாயிகளின், உழைப்பாளிகளின் பண்டிகை. தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை என்பதால், இந்த தினத்தை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆம், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை ஒட்டி சுமார் 2 கோடியே 6 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசாக ஜனவரி 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இவை மட்டுமின்றி, வழக்கம்போல் அரிசி, சர்க்கரை, முந்திரி திராட்சையும் துணிப் பையில் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, வழக்கமாக வழங்கப்படும் துண்டு கரும்புக்குப் பதிலாக முழு கரும்பே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த முறை 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 2,500 ரூபாய் வழங்கி சாதனை படைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

4ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் 2021ம் ஆண்டு சிறப்பாகவே அமையும். முதல்வர் எடப்பாடியே முதல்வர் பதவியில் தொடர்வார் என்று மக்கள் ஆனந்தப்படுகின்றனர்.