கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

இந்தியா முழுவதும் அழுகு செடியாக வளர்க்கப்படும் மருதோன்றி என்று அழைக்கப்படும் மருதாணியின் இலை, பூ, விதை, பட்டை, வேர் போன்ற அத்தனையும் மருத்துவ குணம் கொண்டவை ஆகும்.


·         நகத்தில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை போன்றவற்றை போக்கி, ஆரோக்கியமாக வளரவைக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. கால் ஆணிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

·         மருதாணி இலை, பூக்களை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், தூக்கமின்மை பிரச்னை தீரும். நிம்மதியான தூக்கம் வரும்.

·         மருதாணியை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து கை, கால்களில் வைத்துக்கொண்டால் பித்தம், மன அழுத்தம், வாதம் போன்றவை நீங்கும்.