பிறந்த நாளில் ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய ஹாஸ்டாக்.

இன்று 68வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இன்னமும் இரண்டே மாதங்களில் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று வீராப்பாக பேசி வருகிறார். அவருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஹேப்பி பர்த் டே ஸ்டாலின் என்ற ஹேஸ்டாக் காலையில் படு வேகமாக பரவி வந்தது. அதனால் ஸ்டாலின் குஷியாக இருந்தார். ஆனால், தற்போது ஸ்டாலினுக்கு எதிராக ஹாஸ்டாக் பரவி வருகிறது. 

ஆம், இன்று காலை முதலே ஸ்டாலின் பிறந்தநாளில், தத்திஸ்டாலின் என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருவதால், ஸ்டாலின் டென்சனில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 

பிறந்தநாளில் கூட இணையவாசிகள் ஸ்டாலினை கலாய்த்து வருவது உடன்பிறப்புகளை கதிகலங்கச் செய்துள்ளது.. அடுத்த முதல்வருன்னு சொன்னாலும் அடங்க மாட்றாங்களே என்று தி.மு.க.வினர் வருந்துகிறார்கள்.